இங்கிலாந்தில் உள்ள ஒரு தந்தை தனது ஒரு வயது மகனின் முதுகை அடிக்கடி டிரம்ஸ் போல அடித்து விளையாட்டு காட்டுவார். இந்த விளையாட்டை அவரது மகனும் ரசிப்பதால் இந்த விளையாட்டு அவர்களுடைய வீட்டில் அடிக்கடி நடக்கும். கடந்த 2ஆம் தேதி அந்த தந்தை தனது மகனின் முதுகில்
டிரம்ஸ் விளையாடும் காட்சியை தனது மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்தார்.
இரவில் பதிவு செய்துவிட்டு காலையில் அவர் எழுந்து யூடியூப் இணையதளத்தை பார்த்தபோது அவர் அதிர்ச்சியில் மூழ்கினார். காரணம் அந்த வீடியோவை சுமார் 1 லட்சம் பேர் வரை பார்த்திருந்தனர். ஒரே நாளில் ஒரு லட்சம் பேர்களுக்கும் மேல் பார்க்கப்பட்டதால் யூடியூப் நிறுவனம் அந்த தந்தைக்கு தகவல் கொடுத்து ஒரு பெரும் தொகையை கொடுக்க முன்வந்துள்ளது. விளையாட்டாக எடுக்கப்பட்ட ஒரு வீடியோவினால் தான் ஒரு கோடீஸ்வரராக மாறிவிட்டதை அறிந்து அந்த தந்தை இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
தற்போது அந்த வீடியோவை 3,60,064 பேர் வரை பார்த்துள்ளனர். தந்தை தனது மகன் முதுகில் டிரம்ஸ் வாசித்து முடித்ததும் அந்த குழந்தை எழுந்து சிரிக்கும் ஒரு புன்னகைக்காகவே இந்த வீடியோவை பலர் பார்த்து ரசித்ததாக கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment