tamiljaffna
Saturday, 7 June 2014
முகநூலில் ஆண்களுக்கு வலைவிரிக்கும் பெண்கள் – எச்சரிக்கை..! (பணம் பத்திரம்)
முகநூல் எந்த அளவிற்கு நன்மை தருகிறதோ அதை விட இரண்டு மடங்கு ஆபத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதில் ஒன்று தான் பணத்தை இழப்பது. இது என்ன சூதாட்டமா பணத்தை இழப்பதற்கு என்று நீங்கள் கேட்கலாம்…! முழுமையாக இந்த கட்டுரையை படியுங்கள்.
இந்த ஆபத்துக்களில் அதிகமாக சிக்கிகொள்பவர்கள் ஆண்களே. இந்த கட்டுரையை படித்து விட்டும் கூட அடுத்த நொடியே பேக் அக்கவுண்ட்களில் பெண்களை படத்தை பார்த்ததும் பல் இழிப்பவர்களின் கவனத்திற்கு…!
பணம் பறிப்பவர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று உண்மையான ஒரு பெண். இரண்டு பெண் பெயரில் உள்ள ஆண்(பேக் அக்கவுண்ட்). இவர்கள் எப்படி ஆண்களை தங்கள் வலையில் விழவைத்து பணம் பறிக்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சிக்கு உரிய விஷயம்.
போலி ஆக்கவுண்ட்:-
முதலில் பேக் அக்கவுண்ட் ஏமாற்று வித்தையை பார்ப்போம்..! ஒரு பெண்ணின் பெயரில் முகநூலில் அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்வார்கள். முகநூலில் இருக்கும் குழுக்களுக்கு சென்று அழகான படங்களை போஸ்ட் செய்வார்கள். கவிதைகள், குழந்தைகள் படங்கள், என பதிவு செய்து தங்களை பெண் போலவே காட்டிக்கொள்வார்கள்.
நம்மளிடம் ஒரு பெண் பேசா மாட்டாளா என ஏங்கும் ஆண் உடனே அந்த பெண்ணிற்கு friend request கொடுப்பான். இங்கு தான் முதலில் நீங்கள் சிக்குகிறீர்கள். அடுத்து அவள்(அவன்) உங்கள் friendrequest-யை என்று கொள்வார்கள். உடனே நீங்கள் அடுத்த நொடியே அவர்களுக்கு message அனுப்புவீர்கள். பதிலுக்கு அவர்களும் அனுப்புவார்கள். எதிர் முனையில் பெண் அல்லது ஆணோ அல்லது திருநங்கையாக கூட இருக்கலாம்.
ஒரு போலி id-யில் உங்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். இவர்கள் முகநூலில் மட்டுமே chatting செய்வார்கள். கொஞ்ச நாள் இப்படியே பேசுவார்கள் நீங்களும் நம்மளிடம் பேசுவது பெண் தான் இனிக்க இனிக்க பேசுவீர்கள். ஒரு சிலர் ஆர்வக்கோளாறில் தங்களுடைய அந்தரங்க விசயங்களையும், தங்களை பற்றிய முக்கிய தகவல்களையும் உளறிவிடுவார்கள். நீங்கள் உளறிய தகவல்களை வைத்து உங்களிடம் எவ்வளவு கறக்கலாம் என திட்டம் தீட்டி விடுவார்கள்.
சிலர் என்ன பேசினாலும் கொஞ்சினாலும் எந்த தகவலையும் உளற மாட்டார்கள். அது போன்ற நபர்களிடம் போலி அக்கவுண்டில் பேசும் நபர் அனுதாபமாக தன்னை காட்டிகொள்வார். தான் மிகவும் கஷ்டத்தில் இருபதாகவும், படிக்க பணம் இல்லையெனவும் கூறிவார். நீங்கள் உடனே நான் மட்டும் உன் அருகில் இருந்தால் கட்டாயம் உதவியிருப்பேன் எனக் கூறுவீர்கள். அடுத்த நொடியே பேங்க் அக்கவுண்ட் எண் உங்களுக்கு அனுப்பி பணம் போடா சொல்வார்கள்.
இவர்களை பெரும்பாலனோர் நம்ப மாட்டார்கள். இந்த ரகமான போலி நபர்களிடம் ஏமாறும் ஆண்கள் மிக குறைவுதான். அடுத்து வருவது தான் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயம்
ஆபத்தான பெண்கள்:-
இரண்டாவது வகையில் ஒரு உண்மையான பெண்ணே தன்னுடைய id-யில் இருந்து வாலிபர்களை தன்னையே நினைத்து உருகும் அளவிற்கு மயக்கிவிடுவாள். தற்பொழுது முகநூலில் அதிகமாக அரங்கேறுவது இது தான். அதிகமாக ஆண்கள் ஏமாறுவதும் இவர்களிடம் தான். இவர்கள் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்..!
தங்களிடம் வரும் ஆண்களிடம் தங்கள் மொபைல் நம்பர் கெடுப்பது, வீடியோ கால் மூலம் பேசுவது, போனில் கடலை பேடுவது போன்ற விசயங்கள் மூலம் தான் 100% உண்மையான பெண் தான் என காட்டிக்கொள்வாள். தன்னிடம் பேசும் நபர்களின் செல்வாக்கு, வசதி என்ன சொத்து மதிப்பு என்ன என்பதை முதலில் நன்கு அறிந்து வைத்துக்கொள்வாள். அவர்களின் பின்னணியை வைத்து அவர்களிடம் எப்படி கறக்கலாம், எவ்வளவு கறக்கலாம் மேலும் எவ்வளவு நாள் கறக்கலாம் என தெளிவாக கணக்கு போட்டு வைத்திருப்பாள்.
பேசுவது பெண் தான் என தெரிந்து கொண்ட ஆண்கள் அவளை அப்பாவி பெண் என நினைத்துக்கொள்வார்கள். அவள் தான் நாம் தேடும் தேவதை என நினைத்துக்கொள்வார்கள். கல்யாணம் ஆனவர்கள் அவளை இரண்டாவது மனைவியாக்க துடிப்பார்கள். அவளை எப்படியாவது அடைந்து விட வேண்டும், காதலிக்க வேண்டும், கல்யாணம் செய்யவேண்டும் என ஒவ்வொருவரும் தங்கள் மனதில் ஆசைகளை வளர்த்துக்கொள்வார்கள்.
ஆனால் அப்பெண்ணோ காரியம் கைகூடிய பிறகு அந்த நபரிடம் பேசுவதை நிறுத்தி விடுவாள். தன்னுடைய மொபைல் நம்பரை மாற்றி விடுவாள். பிறகு தான் அந்த ஆணுக்கு புரியும் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று.
ஒரு நாளைக்கு ஒரே நேரத்தில் 10 ஆண்களுடன் பேசும் திறமை உள்ளவர்கள் இப்பெண்கள். முதலில் தங்களின் மொபைல் நம்பருக்கு ரீசார்ஜ் செய்து விட சொல்லுவார்கள். அவள் தன்னிடம் மட்டும் தான் பேசுகிறாள் என நினைத்து இவர்களுக்கும் கண்ணு முண்ணு தெரியாமல் ரீசார்ஜ் செய்துவிடுவார்கள். இப்படி ஒரு நாளைக்கு ஒரு ஆணிடம் 50 ரூபாய் வாங்கினால் 10 பேரிடம் 500 ரூபாய் வரை சம்பாதித்து விடுவார்கள்.
தற்பொழுது வோடபோன் போன்ற மொபைல் நிறுவனங்கள் மொபைலில் உள்ள பணத்தை தொகையை கையில் கொடுத்துவிடும். இந்த திட்டம் இவர்களுக்கு மிகவும் வசதியாகிவிட்டது. உடனே அருகில் உள்ள மொபைல் கேர்கு சென்று நீங்கள் ரீசார்ஜ் செய்த தொகையை பணமாக மாற்றி விடுவார்கள்.
இப்படிதான் பணம் சம்பாதிக்கின்றார்கள் முகநூல் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment