இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
‘கத்தி’ திரைப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த இரண்டு வேடங்களில் ஒரு வேடம் வில்லன் வேடம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. நடிகர் விஜய் இதற்கு முன்னர் அழகிய தமிழ்மகன் படத்தில் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘கத்தி’ திரைப்படத்தில் வில்லன் விஜய் 90 அப்பாவி சிறுவர்களை கடத்தி சென்று கொடுமைப்படுத்துவதோடு அவர்களை பணயக்கைதிகளாக வைத்துக்கொண்டு அரசிடம் பேரம் பேசுவதாகவும், அவரது சதியை இன்னொரு விஜய் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் கதை என்று தெரியவந்துள்ளது.
இந்த கதையை முருகதாஸின் உதவியாளர் ஒருவர் சமீபத்தில் சென்னையில் உள்ள பார் ஒன்றில் போதையில் உளறியதை அருகில் இருந்து கேட்ட அவருடைய நண்பர்கள் மூலம் வெளியே கசிந்துள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் திடீரென கத்தி திரைப்படத்தின் கதை கசிந்துவிட்டதால் விஜய் மற்றும் முருகதாஸ் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment