Wednesday, 4 June 2014

கனடா தம்பதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த! 800 கோடி ரூபாய் லாட்டரி டிக்கெட்

$50  மில்லியன் மதிப்புள்ள லாட்டரி சீட்டு ஒன்றை தொலைத்துவிட்டு சோகமாக இருந்த  கனடா தம்பதிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக தொலைந்த லாட்டரி சீட்டை நேர்மையாக  ஒருவர் எடுத்துக்கொண்டு வந்து திரும்ப ஒப்படைத்த சம்பவம் ஒன்று  ஒண்டோரியோவில் நடந்துள்ளது.
கனடாவின் ஒண்டோரியோவை சேர்ந்த Hakeem Nosiru என்பவர் கடந்த ஜனவரி மாதம்  Lotto Max draw என்ற லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார். குலுக்கல் நாளன்று  பரிசு விழுந்த விபரத்தை பார்த்தபோது, தனக்கு $50 மில்லியன் பரிசு விழுந்ததை  பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அந்த லாட்டரி சீட்டை  எடுத்து மனைவியின் பர்சில் வைத்துக்கொண்டு இருவரும் சர்ச்சுக்கு சென்றனர்.
எதிர்பாராதவிதமாக சர்ச்சில் மனைவியின் பர்ஸ் தொலைந்துவிட்டதால் லாட்டரி  சீட்டும் சேர்ந்து தொலைந்துவிட்டது. இதனால் தம்பதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  லாட்டரி சீட்டில் விழுந்த பரிசுத்தொகையை வாங்கமுடியாமல் இருந்த அவருக்கு  கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சர்ச்சுக்கு வந்த  ஒருவர் முட்புதர் ஒன்றில் பர்ஸ் இருந்ததாகவும், பர்ஸில் உள்ள முகவரியை  பார்த்து திரும்ப ஒப்படைத்ததாகவும் கூறி, தொலைந்து போன பர்ஸை Hakeem Nosiru  அவர்களிடம் கொடுத்தார். இதனால் கனடா தம்பதிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே  இல்லை.
பின்னர் லாட்டரி நிறுவனத்திடம் சென்று தங்களுக்கு விழுந்த பரிசுப்பணத்தை  தரக்கோரினர். பரிசு விழுந்த ஐந்து மாதங்கள் ஆனதால் பரிசு நிறுவனத்தினர்  விசாரணை செய்த பின் பணம் தருவதாக கூறினர். பின்னர் தம்பதிகள் கூறிய  அனைத்தும் உண்மை
என்பது நிரூபணமாகவே நேற்று முன்தினம்
(02-06-2014) அவர்களுக்கு பரிசுப்பணமான $50 மில்லியன் கொடுக்கப்பட்டது.  இந்த பணத்தை வைத்து தாங்கள் இருவரும் உலகம் முழுவதும் சுற்றிப்பார்க்க  விரும்புவதாக Hakeem Nosiru தம்பதிகள் கூறினர்

No comments:

Post a Comment