டெல்லியில் பொறியியல் கல்லூரி மாணவர் குறும்புத்தனமாக எடுத்த ஒரு வீடியோவை, யூடியூப் இணையதளத்தில் இரண்டே நாட்களில் சுமார் 5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
20 வயது கல்லூரி மாணவனான பிரதீக் வர்மா என்பவர் வீடியோ கேமரா ஒன்றை மறைத்து வைத்துவிட்டு, பின்னர் தனது தந்தையை தனிமையில் அழைத்து தான் ஒரு விஷயம் கூறப்போவதாகவும், அதை கேட்டு அவர் கோபப்படக்கூடாது என்றும் கூறிவிட்டு பின்னர் தனது காதலி கர்ப்பமாக இருக்கிறாள்.
அதனால் எனக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரதீக் வர்மாவின் தந்தை சுந்தர் வர்மா, காலால் எட்டி உதைத்ததோடு, மாறி மாறி கையால் அடிக்கிறார்.
அதன்பின்னர் பிரதீக்வர்மா, தனது தந்தையிடம் ஒரு வீடியோவை விளையாட்டுக்காக எடுகக் நினைத்ததாகவும், தான் சொன்னது எல்லாமே பொய் என்றதுதாம் சுந்தர்வர்மா நிம்மதியுடன் செல்கிறா.ர்
இந்த வீடியோவை பிரதீக் வர்மா, யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்த இரண்டே நாட்களில் சுமார் 5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
No comments:
Post a Comment