அமெரிக்காவில் தாயை தாக்கியவனை எதிர்த்து அவரது 2 வயது குழந்தை போராடிய வீரச் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் என்ற நகரில் லடியா ஹாரீஸ் (25) என்ற பெண் மெக்டோனாட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய 2 வயது மகனுடன் அருகே உள்ள பூங்காவிற்கு பொழுதுபோக்கிற்காக சென்றபோது அங்கு வந்து மர்ம நபர் ஒருவர் இவரிடம் தவறாக முயன்றுள்ளான். இதை பார்த்த ஹாரீசின் குழந்தை, தன்னுடைய தாயாரை விட்டுவிடுமாறு அழுதுகொண்டே கூறியதோடு கால்பந்தை எட்டி உதைப்பது போல் அந்நபரை உதைத்து தள்ளியுள்ளான். ஆனால் இந்த சண்டையை தவிர்க்க அருகிலிருந்த மக்கள் எவரும் செல்லாமல், இதனை புகைப்படம் எடுப்பதுடன் காணொளிகளாய் பதிவு செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரி ஜான் பெலுரா இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது தாயை காப்பாற்ற வேண்டும் என்ற வெறியுடன் ஒரு குழந்தைக்கு இருந்த எண்ணம் கூட அந்த பூங்காவில் இருந்த மற்றவர்களுக்கு இல்லாமல் போனது வருத்ததை தருகிறது என்றும் உதவிக்கு செல்லாமல் பிறர் இவ்வாறு புகைப்படம் பிடித்து கொண்டிருந்தது பொறுப்பற்ற செயலாய் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment