Wednesday, 9 July 2014

இஸ்லாமிய நண்பர்களை ஏமாற்ற விஜய், முருகதாஸ் போட்ட குல்லா நாடகம் அம்பலம்..

சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் கடப்பாவில் உள்ள தர்காவில் இஸ்லாமியர்களை போல குல்லா அணிந்து வழிபாடு நடத்தினர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவின. இந்த புகைப்படங்களை விஜய்யும் முருகதாசும் திட்டமிட்டே சமூக வலைதளங்களில் பரவ செய்துள்ளனர் என தற்பொழுது புதிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குல்லா நாடகம் இஸ்லாமிய நண்பர்களை ஏமாற்ற இருவரும் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர் என்பது மிக தெளிவாக தெரிகின்றது. ஏ.ஆர்.ரகுமான், சல்மான்கான், ஷாருக்கான் போன்ற திரையுலக பிரமுகர்கள் அடிக்கடி இந்த கடப்பா தர்காவுக்கு செல்வது வழக்கம். ஏ.ஆர்.முருகதாஸை முதன் முறையாக அமீர்கான்தான் இந்த தர்காவிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் பிறகு முருகதாஸ் தர்காவிற்கு சென்றதில்லை. தற்பொழுது கத்தி படத்தை ஓட வைக்க தர்காவிற்கு இருவரும் இஸ்லாமியர்களை போன்று குல்லா அணித்து வழிபாடு செய்து பெரிய நாடகத்தையே அரங்கேற்றியுள்ளனர். அதன் பின்னணி விவரம் பின்வாருமாறு:- விஜய் – முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த படம் துப்பாக்கி. அந்த படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைத்தனர். இது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை பூதகரமாக வெடித்தது. தமிழகம் முழுவதும் துப்பாக்கி படத்தை எதிர்த்து விஜய் முருகதாஸ் எதிராக கோஷங்களை எழுப்பினர். மமமுகவினர் “விஜய்யை நீ ஒரு அப்பனுக்கு பிறந்தவனா” என கேள்வியை எழுப்பி அந்த பிரச்சனையும் பூதகரமாக வெடித்தது. பின்னர் ஒரு வழியாக இனிமேல் இதுபோன்ற படங்களை எடுக்கமாட்டேன். இஸ்லாமியர்கள் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது என இஸ்லாமியர்களை சமதானபடுத்தி துப்பாக்கி படத்தை திரையிட்டார் முருகதாஸ். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் விஜய், மோடியை அழையா விருந்தாளியாக சந்தித்தார். இந்த செயல்கள் இஸ்லாமியர்கள் மனதில் நெருப்பைக்கக்கின. மேலும் கத்தி படத்திலும் 90 குழந்தைகளை பிணையக்கைதியாக பிடித்து வைத்து தீவிரவாத செயல்கள் ஈடுபடுவது போன்ற காட்சிகள் உள்ளன. எனவே இந்த முறை இஸ்லாமியர்கள் விஜய்க்கு எதிராக பெரிய பிரச்சனையை எழுப்பினால் 100 சதவிகிதம் படம் வெளிவராது. ஏற்கனவே ஆளும் கட்சி தலைவா படத்திற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து எல்லோருக்குமே தெரியும். இதையெல்லாம் நன்கு அறிந்த விஜய் இஸ்லாமிய நண்பர்களை கவருவதற்காக புதிய யுக்தியை கையாண்டுள்ளார். அதற்காக தான் தர்கா, குல்லா, அல்லாவை வழிபாடு செய்தது எல்லாம். இந்த படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பிவிட சொன்னதே ஏ.ஆர்.முருகதாசும், நடிகர் விஜய்யும் தானாம். இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றது. ஏற்கனவே விஜய் மேல் அதிருப்தியில் இருக்கும் இஸ்லாமியர்கள், தங்கள் மதத்தையும் கடவுளையும் விஜய்யும், முருகதாசும் சுயநலத்திற்காக பயன்படுதியுள்ளது மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறமிருக்க லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் கைக்கூலி என்பதற்காக தமிழ் உணர்வாளர்கள் கத்தி படத்தை முடக்குவதற்கு திட்டம் தீட்டினர். இதில் சில போலி தமிழ் அமைப்பினர் விஜய்யிடம் பணம் வாங்கிகொண்டு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என கூறியதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. ஆனால் சில தீவிர தமிழ் உணர்வாளர்கள் கத்தி படத்தின் ரிலீஸின் போது அழுத்தமான போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இருதரப்பினர்களில் யாரேனும் ஒருவர் போராட்டத்தை துவங்கினால் கூட கத்தி மழுங்கிப்போய்விடும் என்பதே உண்மை. எனவே கத்தி வெளிவருமா? அல்லது மழுங்கிபோய் விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

No comments:

Post a Comment