ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பண்டிகையையொட்டி ஷியா பிரிவினர் சிலர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட காணொளியை இணையதத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். ஈராக்கை கைபற்றி தினந்தினம் அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் இஸ்லாமிய மதத்தின் பண்டிகையான ரமலான் நாளிலிலும் வெறிச்செயலிற்கு விடுமுறை அளிக்கவில்லை. நேற்று உலகெங்கும் ரமலான் கொண்டாடப்பட்டது.
ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளோ தாங்கள் படுகொலை செய்த காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் கைதிகளாக பிடிக்கப்பட்ட 50 ஷியா இஸ்லாமியர்கள், லொறி ஒன்றில் ஏற்றப்படுகின்றனர். இதன்பின் அவர்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டு மண்டியிட்டு மரணத்தண்டனை நிறைவேற்றத்துக்காக காத்திருப்பதையும், அவர்களுக்கு கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படும் காட்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும் தரையை நோக்கியிருக்க அமர்ந்திருந்த கைதிகளாய் பிடிக்கப்பட்டவர்களை சுற்றி நின்ற தீவிரவாதிகள், ஒருவர் பின் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளனர். இறுதியில் அவர்களது சடலங்களை நீரில் விசீவிட்டு செல்கின்றனர்.
No comments:
Post a Comment