Tuesday, 29 July 2014

தோரணம் போல் தொங்கும் தலைகள்: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூர செயல் (வீடியோ இணைப்பு)

சிரியா நாட்டின் ராணுவ வீரர்களின் தலைகளை கொய்து அவற்றை கம்புகளிலும், மின் கம்பங்களிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சொருகி வைத்துள்ளனர். சிரியாவின் ரக்கா நகரில் உள்ள ராணுவ முகாமை ஐ.எஸ்.ஐ.எஸ் கைபற்றியபோது அங்கிருந்த 85 வீரர்களைக் கொலை செய்துள்ளனர். இதில் 200 பேரின் கதி என்ன என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் கொல்லப்பட்ட வீரர்களில் சுமார் 50 பேரின் தலைகளை வெட்டி கம்பங்களில் சொருகி வைக்கப்பட்டுள்ள காட்சி காணொளி ஒன்றில் பதிவாகியுள்ளது மற்றும் காணொளியின் பின்னணியில் தீவிரவாதி ஒருவரின் குரல் இடம் பெற்றுள்ளது. இதனைதொடர்ந்து புகைப்படம் ஒன்றில் சிரியாவில் கைப்பற்றிய கட்டிடம் மீது தீவிரவாதி ஒருவர் கருப்புக் கொடியுடன் காட்சி தருகிறார். மேலும் மற்றொரு படத்தில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் புகைப்படத்தை எரிக்கும் காட்சியும் உள்ளது. இவர்களின் இந்த வெறிச்செயல் தாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என ரக்கா மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போல் இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment