Sunday, 11 May 2014
தோள்பட்டையில் குத்தி வெளியேவந்த கூரிய கம்பிகளுடன் 20 மணி நேரம் போராடிய பெண்
துருக்கி நாட்டின் அடனா பகுதியை சேர்ந்த பெண் செய்டா ஓருக் (வயது 35). வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில் பழங்களை பறித்து தர அவரது மகள் கேட்டாள்.
மகளின் ஆசையை நிறைவேற்ற ஓருக் மரத்தின் அருகில் உள்ள சுவரில் ஏறி, பழங்களை பறிக்க முயன்றார். அப்போது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். அவர் விழுந்த இடத்தில் கூர்மையான கம்பிகள் அடங்கிய கிரில் கேட் இருந்தது. அந்த கேட்டின் கம்பிகள் அவரது தோள்பட்டையில் குத்தில் வெளியே வந்து விட்டது.
இதை பார்த்த அவருடைய 3 வயது மகள் அலறினார். ஆனால் துணிச்சல் மிகுந்த ஒரூக் மகளுக்கு சமாதானம் கூறி, தன்னுடைய மொபைல் போனை எடுக்க சொல்லி, பின்னர் மொபைல் போன் மூலம் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். ஆம்புலன்ஸ் வருவதற்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகியது. அதுவரை அவர் தைரியமாக இருந்ததோடு, தனது மகளுக்கும் ஆறுதல் கூறினார்.
மருத்துவ குழுவின்ருடன் வந்த மீட்புபடையினர் விரைவாக வந்து, அவருடைய கையை கம்பியில் இருந்து உடனே எடுத்தால் ஆபத்து என கருதி, மிகப்பெரிய கட்டிங் பிளேடால் இரும்பிக்கம்பிகளை வெட்டி எடுத்து, கை மற்றும் இரும்புக் கம்பிகளோடு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். 20 மணி நேரம் மிகுந்த போரட்டத்திற்கு பின் மருத்துவமனையில் அவர் தோள்பட்டையில் இருந்து கம்பிகளை அகற்றினர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
அதுவரை மனதைரியத்துடன் இருந்த அந்த பெண்ணை டாக்டர்கள் பாராட்டினர்.
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment