Thursday, 15 May 2014

இப்படியே போனால் எல்லாரும் சோம்பேறி என்ற பெயர் வாங்கலாம்

அகதி என்ற பெயரில் இந்தியா சென்ற தயாபரராஜாவும் மனைவி உதயகலாவும் ...........

சிறிலங்காவிலிருந்து அண்மையில் தமிழகத்திற்குச் சென்றவர்களில் தயாபரராஜா மற்றும் அவரது மனைவி உதயகலா ஆகியோர் வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வாட்டி வதைத்து ஏறக்குறைய ஐந்துகோடி ரூபா நிதி மோசடி செய்துகொண்டு அகதி என்ற பெயரில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற விடயம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
சிறிலங்கா படைப்புலனாய்வாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த இவர்கள் இருவரும் தமிழ் மக்களை அச்சுறுத்தினர். சிறிலங்கா படையினர் இறுதி யுத்தத்தின்போது கைது செய்து சிறைகளில் தடுத்து வைத்திருக்கின்ற முன்னாள் போராளிகள், மற்றும் சாதாரண பொதுமக்களை விடுவிக்க முடியும் என்று உறவுகளுக்கு ஆசை வார்த்தை கூறிய இவர்கள் அதற்காக அந்த உறவுகளிடம் இருந்து பல இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றிருக்கின்றனர்.
இவ்வாறு ஒரு குடும்பத்திடம் இருந்து இவர்கள் அதியுச்ச பட்சத் தொகையாக 37 லட்சம் ரூபாவைப் பெற்றது தெரியவந்துள்ளது. ஏனைய குடும்பங்களிடமிருந்து 30 இலட்சம், 15 இலட்சம், 13 இலட்சம், 7 இலட்சம், 6 இலட்சம் மற்றும் அதற்கு கீழான தொகைகளையும் பெற்றிருக்கின்றனர். முழுவதுமாக ஐந்து கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை இவர்கள் மோசடி செய்திருக்கின்றனர்.
இவர்களுக்கு எதிராக கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் வவுனியா ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவருகின்றது. பல பெண்களை படையினருக்கும் படைப் புலனாய்வாளர்களுக்கும் இவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்த விடயங்களும் கண்ணீர் கதைகளாக அம்பலமாகியிருக்கின்றன.
எனவே, இவர்களுக்காக தமிழ்நாட்டிலுள்ள எந்தவொரு அமைப்போ அரசியல்வாதிகளோ குரல்கொடுக்க வேண்டாமென்றும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்குமாறும் தாயகத்திலுள்ள உறவுகள் தமிழக உறவுகளிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இவர்களால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இவர்கள் தொடர்பான சகல விடயங்களையும் சங்கதி24 இற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இவர்கள் தொடர்பாக சங்கதி24 இற்கு கிடைத்த தகவல்கள் வருமாறு:
தயாபரராஜா (தேசிய அடையாள அட்டை இலக்கம் 810020431V) யாழ்ப்பாணம் காரைநகர் வாரிவளவைச் சேர்ந்தவர். இவருடைய தகப்பனின் பெயர் செல்லத்துரை கதிரவேலு. இவர் பெரதெனியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொண்டு 2005 ஆம் ஆண்டு வெளியேறியவர். இதன் பின்னர் வன்னி நெற் என்ற பெயரில் முல்லைத்தீவில் தகவல் தொழில்நுட்ப நிலையம் ஒன்றை நடத்தியவர். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மாதாந்தம் ஏறக்குறை ஐம்பதினாயிரம் ரூபா பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்காக தகவல் தொழில்நுட்ப பணியாற்றியவர்.
தயாபரராஜாவின் மனைவி பெயர் உதயகலா. (தேசிய அடையாள அட்டை இலக்கம் 825884726V) இவர் சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்தவர். இவர்கள் திருமணம் செய்து மூன்று பிள்ளைகள் உண்டு. மூத்த மகன் டியோரன் (9வயது), மகள்கள் டிலினி (6வயது), டில்கியா (2வயது). இவர்கள் ஆரம்பத்தில் முல்லைத்தீவில் வசித்த போதிலும் தற்போது இலக்கம் 60, ஆரம்பப் பாடசாலை வீதி, வவுனியாவில் வசித்து வந்த நிலையிலேயே இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.
சிறிலங்கா படையினருடனும் படைப் புலனாய்வாளர்களுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள தயாபரராஜாவும் உதயகலாவும் ஒருவருக்கு மற்றையவர் சளைத்தவர்கள் அல்ல என்ற நிலையில் மோசடிக்காரர்கள். தயவு தாட்சண்யம் இல்லாதவர்கள். வன்னியில் கணவனை இழந்த விதவைகள், யுத்தத்தால் ஊனமுற்றவர்கள், பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்கள், முன்னாள் போராளிகளின் மனைவிகள் என்றவாறு இவர்களால் பாதிக்கப்பட்ட ஏறக்குறை அறுபது பேருக்கு மேற்பட்டவர்கள் தற்போது கண்ணீரும் கம்பலையுமாக உள்ளனர்.
படைத் தலைமையுடன் தமக்கிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் தரவுகளைப் பெற்றுக்கொண்ட இவர்கள் இருவரும் தடுப்பிலுள்ளவர்களின் மனைவிமார் அல்லது பெற்றோருடன் தொடர்புகொண்டு உங்கள் உறவுகள் இந்த தடுப்பு முகாமில் இருக்கின்றனர் என்று பெயர், விபரங்களைக் கூறி, அவர்களை படையினர் சுடுவதற்கு தயாராகி வருகின்றனர். நாங்கள் மீட்டுத் தருகிறோம். இவ்வளவு பணம் தாருங்கள் என்று கூறி பெரும்தொகைப் பணத்தை மோசடியாகப் பெற்றுக்கொண்டனர்.
இதற்கு மேலாக, வன்னிப் போரில் ஊனமுற்றவர்களுக்கு புலம்பெயர் நாட்டிலுள்ள சில அமைப்புகள் உதவி செய்துவருவதை அறிந்த இவர்கள் குறித்த ஊனமுற்றவர்களிடம் சென்று தங்களுக்கும் வெளிநாட்டு பராமரிப்பு அமைப்புகளுக்கும் தொடர்புகள் உள்ளன என்றும் இதனால் வெளிநாட்டுக்கு சென்று நல்ல நிலையில் வாழலாம் என்றும் கூறியிருக்கின்றனர். இதனை நம்பிய அவர்களும் தமக்கு உதவி செய்கின்ற புலம்பெயர் நாட்டிலுள்ளோரின் விபரங்களை தயாபரராஜா மற்றும் மனைவி உதயகலா ஆகியோரிடம் வழங்கியிருக்கின்றனர். 
இதனைப் பயன்படுத்தி புலம்பெயர் நாட்டிலுள்ள அந்தச் சேவையாளர்களைத் தொடர்புகொண்ட தயாபரராஜா தம்பதியினர் தாங்கள் சிறிலங்காவிலுள்ள மனிதநேய அமைப்பொன்றிலிருந்து கதைப்பதாகவும் உங்களால் பராமரிக்கப்படுகின்றவர்களை நாங்கள் வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவெடுத்திருக்கின்றோம். அதற்கு ஆகவேண்டிய செலவாக நீங்கள் இத்தனை இலட்சம் ரூபாவை வழங்க முடியுமா என்றும் கேட்டிருக்கின்றனர்.
அந்த நல்ல மனம் படைத்த புலம்பெயர் உறவுகளும் இந்த மோசடிப் பேர்வழிகளை நம்பி இலட்சக்கணக்கான ரூபா பணத்தை அனுப்பியிருக்கின்றனர். இந்தப் பணம் முழுவதையும் இவர்கள் சுருட்டிய பின் அந்த ஊனமுற்றவர்களை கைகழுவினர்.
இவ்வாறு யாழ்ப்பாணம் மற்றும் வன்னியிலுள்ள பல ஊனமுற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு தமது வாகனங்களில் கொழும்புக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து வெளிநாட்டு தரகர்கள் போன்று சிலரைச் சந்திக்க செய்த பின்னரேயே இவர்களிடம் இருந்து பணம் கறக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றவர்களையே வாட்டி வதைத்த மனிதநேயமற்ற தயாபரராஜா, உதயகலா தம்பதியினரின் செயல் தங்களை மிகவும் கொதிப்படையச் செய்துள்ளதாக இந்த தகவல்களை அறிந்தவர்கள் தற்போது கவலை வெளியிடுகின்றனர்.
தடுப்பிலுள்ளவர்களை விடுவிப்பதற்காக குறித்த பணத்தை தராவிட்டால் உறவினர்களை கடுமையாகத் தாக்கவும் இவர்கள் தயங்கியதில்லை. ஒரு தடவை தடுப்பிலுள்ள தனது மகனை விடுவிப்பதற்காக பெருந்தொகைப் பணத்தைப் பேரம்பேசிய சாவகச்சேரியைச் சேர்ந்த வயதான பெண்ணொருர் மகனை விடுவிக்காத நிலையிலும் குறித்த பணத்தைக் கொடுக்காததால் தயாபரராஜின் மனைவி உதயகலா கடுமையாகத் தாக்கியிருக்கின்றார். அதனால் அந்த வயதான தாயார் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருக்கின்றார்.
ஜீன்ஸ் அணிந்து எடுப்பாகத் தோற்றமளிக்கும் உதயகலா தடுப்பிலுள்ளவர்களின் உறவினர்களது வீடுகளுக்குச் சென்று தன்னை இராணுவப் புலனாய்வாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு தடுப்பிலுள்ள உறவினர் தொடர்பில் விசாரிப்பதற்கு நாலாம் மாடிக்கு வருமாறு அச்சுறுத்திவிட்டு கொழும்பிற்கு வந்து அழைப்பு எடுக்குமாறு தனது தொலைபேசி இலக்கத்தை வழங்கிச் செல்வாராம். உறவுகள் பயந்தவாறு கொழும்பிற்குச் சென்று அந்த இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டால் அவர்களை அழைத்துச் சென்று மறைவிடத்தில் தடுத்து வைத்திருந்துகொண்டு உறவினர்களுக்கு அழைப்பு ஏற்படுத்தி இவ்வளவு பணம் தந்தால் தான் அவரை விடுவிக்க முடியும் என்றும் கூறி இலட்சக்கணக்கான பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் விடுதலை செய்திருக்கின்றார்கள்.
சிறிலங்காவிலுள்ள பல்வேறு வங்கிகளிலும் கணக்குகளைப் பேணுகின்ற தயாபரராஜா உதயகலா ஆகிய இருவரும் அந்தக் கணக்குகளின் மூலமே பணத்தைப் பெற்றுள்ளனர். தயாபரராஜின் கொமர்சல் வங்கிக் கணக்கு இலக்கம்- 8100065900 வெள்ளவத்தை கிளை, இவருடைய செலான் வங்கி கணக்கு இலக்கம் - 0137001-013725 இவருடைய மக்கள் வங்கிக் கணக்கு இலக்கம் 0142001-7000-1411 யூனியன் பிளேஸ் கிளை. இந்தக் கணக்குகளில் சில கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியில் இருந்து இவர்களின் கடந்த மாதம் வரை படைப் புலனாய்வாளர்களின் உதவியுடன் இவர்களின் மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இவர்கள் இருவருக்கும் எதிராக பிடியாணை உத்தரவுகள் உள்ளமையால் இவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் படைப் புலனாய்வாளர்களின் உதவியுடனேயே இவர்கள் தமிழகம் சென்றிருக்கலாம் என்றும் பரவலாக நம்பப்படுகின்றது.
வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலுள்ள ஏறக்குறைய அறுபது வரையானவர்கள் இவர்களிடம் தனித்தனியே பல லட்சக்கணக்கான ரூபா பணத்தைக் கொடுத்துவிட்டு நிர்க்கதியாக நிற்கின்றனர். தற்போது இவர்கள் இருவரும் தமிழகம் தப்பிச் சென்றுவிட்டனர் என்று செய்தியறிந்ததால் செய்வதறியாத நிலையில் தவிக்கின்றனர்.
இவர்களுக்கு படையினருடனும் படைப் புலனாய்வாளர்களுடனும் நெருக்கமான தொடர்புகள் உள்ளதால் பணத்தைக் கேட்டால் என்ன நடக்குமோ என்று அஞ்சியதால் தாங்கள் அச்சமடைந்த நிலையில் இருந்தாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் துணிச்சலான சிலரே முன்வந்து இவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். ஆனாலும் இவர்கள் இருவரும் எந்தவொரு தவணைக்கும் வழக்குகளுக்குச் செல்வதில்லையென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மேற்படி இருவருக்கும் தமிழக உறவுகளோ தமிழக அரசியல் கட்சிகளோ எந்தவிதத்திலும் ஆதரவுக்குரல் எழுப்பக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ள பாதிக்கப்பட்ட உறவுகள் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட தமக்கு பணத்தைப் பெற்றுத்தர உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு, கிளிநொச்சியிலிருந்து
கதிரவன், முகிலன்

குற்றம் நடந்தது என்ன ? சிரிக்கவும் முடியும் சிந்திக்கவும் முடியும்

Wednesday, 14 May 2014

கிழக்கு லண்டனின் 100 வருட நாகரீக நாகரீக மாற்றத்தை வெறும் 100 நொடிகளில் காட்டும் வீடியோ காட்சி!!

இந்த வீடியோ கனத்த இதயத்தை கூட கண் கலங்க வைக்கும்..தாய் பாசம்...

தாய் பாசம்...
இந்த வீடியோ கனத்த இதயத்தை கூட கண் கலங்க வைக்கும்..

தங்களுக்கு குழந்தை இல்லை எனில் தத்தெடுப்பது தவறில்லை..
Give a Life to a Child....

மூன்று வினாடிகளில் வழுக்கை தலையில் முடி...

மூன்று வினாடிகளில் வழுக்கை தலையில் முடி... ஆனா குளிச்சி முடிச்சி முடியை காணோம்னு கம்ப்ளைண்ட் எல்லாம் பண்ண கூடாது

 

Sunday, 11 May 2014

முத்தையா முரளிதரனின் திறமையை பாருங்கள் மெய்சிலுர்த்து போய்விடுவீர்கள்

பில்டிங் ஸ்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு

எதுலும் ஆழம் அறியாமல் காலை விடாதிர்கள்

தோள்பட்டையில் குத்தி வெளியேவந்த கூரிய கம்பிகளுடன் 20 மணி நேரம் போராடிய பெண்


துருக்கி நாட்டின் அடனா பகுதியை சேர்ந்த பெண் செய்டா ஓருக் (வயது 35). வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில் பழங்களை பறித்து தர அவரது மகள் கேட்டாள்.

மகளின் ஆசையை நிறைவேற்ற ஓருக் மரத்தின் அருகில் உள்ள சுவரில் ஏறி, பழங்களை பறிக்க முயன்றார். அப்போது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். அவர் விழுந்த இடத்தில் கூர்மையான கம்பிகள் அடங்கிய கிரில் கேட் இருந்தது.  அந்த  கேட்டின்  கம்பிகள் அவரது தோள்பட்டையில் குத்தில் வெளியே வந்து விட்டது.

இதை  பார்த்த அவருடைய 3 வயது மகள் அலறினார். ஆனால் துணிச்சல் மிகுந்த ஒரூக் மகளுக்கு சமாதானம் கூறி,  தன்னுடைய மொபைல் போனை எடுக்க சொல்லி, பின்னர் மொபைல் போன் மூலம் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். ஆம்புலன்ஸ் வருவதற்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகியது. அதுவரை அவர் தைரியமாக இருந்ததோடு,  தனது மகளுக்கும் ஆறுதல் கூறினார்.

மருத்துவ குழுவின்ருடன் வந்த மீட்புபடையினர் விரைவாக வந்து, அவருடைய கையை கம்பியில் இருந்து உடனே எடுத்தால் ஆபத்து என கருதி, மிகப்பெரிய கட்டிங் பிளேடால் இரும்பிக்கம்பிகளை வெட்டி எடுத்து, கை மற்றும் இரும்புக் கம்பிகளோடு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். 20 மணி நேரம் மிகுந்த போரட்டத்திற்கு பின் மருத்துவமனையில்  அவர்  தோள்பட்டையில் இருந்து கம்பிகளை அகற்றினர். பின்னர் அவருக்கு சிகிச்சை  அளிக்கபட்டு  வருகிறது.

அதுவரை  மனதைரியத்துடன்  இருந்த  அந்த பெண்ணை டாக்டர்கள் பாராட்டினர்.




Thursday, 8 May 2014

பாம்பு குட்டி இடுவதை பாத்திறுக்கின்றிர்களா ?

Birth of a snake

உங்க வாழ்நாளில் இப்படி ஒரு ஆட்டமிழப்பை பார்த்திருக்க மாட்டீர்கள்

கென்னியர்கள் பாடிய இந்திய நாட்டின் தேசிய கீதம் பாருங்கள்..........

கென்னியர்கள் பாடிய இந்திய நாட்டின் தேசிய கீதம் பாருங்கள்..........

அப்பிலை வைத்து இவர் செய்யும் வேலையை பாருங்கள்.....

கெல்மட் போடாமல் மோட்டார் பைக் ஓடுவபர்கள் இதை பார்க்கவும்..

CCTV கேமிராவில் பதிவான காட்சி வெடிகுண்டு பின்னணி...

இந்திய நாட்டில் சென்னைய் சென்றல் ரயில் நிலையத்தில் CCTV கேமிராவில் பதிவான காட்சி வெடிகுண்டு பின்னணி...