Monday, 10 November 2014
iphone 6 வாங்கியவருக்கு நடந்த கொடூரம்.. கதறி கதறி அழுத நபர் கைகொடுத்த மக்கள்.. என்ன நடந்தது என பாருங்க ..
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை வாங்கிவிட்டு கதறி அழுத சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் நாட்டை சேர்ந்த பாம் வான் தொய் என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு அவர் தன்னுடைய காதலிக்கு ஐபோன் 6 ஒன்றை வாங்க விரும்பி ஆப்பிள் காட்சிறைக்கு சென்றுள்ளார். அங்கு ஐபோன் 6 ஒன்றி விலை 950 டொலர்கள் என காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையடுத்து ஐபோன்6 ஒன்றினை வாங்கினார்.
ஆனால் அவருடைய ஐபோனுக்கு மேலதிக உத்தரவாக கட்டணத்தை சேர்த்து 1500 டொலர்கள் என அவருக்கு பற்றுச்சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை கவனிக்காமல் தன்னுடைய டெபிட் கார்டை கொடுத்து பணத்தை கட்டிவிட்டார்.
பின்னர் தொகையை பார்த்து அதிர்ச்சி அடைந்த குறித்த நபர், தான் மாதம் 200 டொலர்கள் மாத்திரமே சம்பாதிப்பதாகவும், எனவே தன்னுடைய பணத்தை திருப்பி கொடுத்துவிடும்படியும் கெஞ்சினார். ஆனால் கடைக்காரர் கொடுக்க மறுத்ததால் அவர் அந்த இடத்திலேயே முழங்கால் இட்டு மண்டியிட்டு அழுது புலம்பினார்.
இந்த பரிதாப காட்சியை ஒருவர் கானொளி எடுத்து சிங்கப்பூரில் உள்ள இணையதளம் ஒன்றிற்கு அந்த கானொளியை அனுப்பியுள்ளார். அந்த இணையதளம், கானொளியை தங்கள் இணையதளத்தில் பதிவு செய்து பரிதாபமான அந்த வியட்நாம் வாலிபருக்கு உதவி செய்ய விரும்புவர்கள் பணம் அனுப்பலாம் என கோரிக்ககை விடுத்தது. இந்த கானொளி பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் 11,713 டொலர்கள் பணம் சேர்ந்துவிட்டது.
அதற்குள் இந்த விடயத்தில் பொலிஸார் தலையிட்டு அவருக்கு 450 டொலர்கள் பணத்தை மட்டும் வாங்கித்தந்தனர்.
தனக்கு 1050 டொலர்கள் நஷ்டம் என அவர் நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் இணையதள நிர்வாகத்தினர் அவருக்கு பொதுமக்கள் அனுப்பிய 11,713 பணத்தை பணத்தை அவருடைய கையில் கொடுத்து நடந்த விடயத்தையும் கூறினர். இதனால் பாம் வான் இன்ப அதிர்ச்சியடைந்து தனக்கு பணம் அனுப்பிய சிங்கப்பூரைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Labels:
VT,
வினோதங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment