துருக்கி நாட்டில் இரட்டை தலையுடன் டொல்பின் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துருக்கியின் மேற்கு கரை நகரமான இஸ்மில் என்ற நகரின் கடலோரத்தில், அந்நாட்டை சேர்ந்த விளையாட்டு பயிற்சியாளர் டுக்ரல் மெடின் (39) சென்றபோது அங்கு இரட்டை தலையுடன் டொல்பின் ஒன்று இறந்து கிடந்தை பார்த்துள்ளார். சுமார் 3.2 எடை கொண்ட இந்த டொல்பினுக்கு ஒரு வயது இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது அரிய வகை டொல்பின் என்பதால், இதை வைத்து பல ஆய்வுகள் நடத்த ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டுக்ரல் மெடின் கூறுகையில், இதை கண்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை என்றும் வினோதமாக இருக்கும் இந்த டொல்பின் எனது கண்களுக்கு தான் இரட்டையாக தெரிவதாக முதலில் நான் நினைத்தேன் எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment