சிரியாவில் துப்பாக்கி முனையில் குழந்தையை அச்சுறுத்துவது போல வெளியான புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிரியாவின் நகர்புறத்திலும், எல்லைகளிலும், உள்நாட்டுப் போரினாலும், கலவரத்தினாலும், குண்டு வீச்சு தாக்குதலினாலும் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிரியாவின் ஜனாதிபதி அசாத், தேர்தலுக்கான உத்தரவைப் பிறப்பித்ததை, அவரது எதிர்ப்பாளர்கள், இதை அசாத்தின் தந்திரம் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
உள்நாட்டுப் போரில் 1,50,000 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கும் இந்நிலையில், யூன் மாதம் 3ம் திகிதியன்று பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறப் போவதாக சிரியா ஜனாதிபதி பசார்-அவ்-அசாத் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அசாத்தின் ஆதரவாளர்கள், சமுக வலைதளங்களில், ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர்.
அதன்படி புரட்சியாளர்கள், ஒரு சிறுகுழந்தையை கைப்பற்றி, மூன்று இயந்திர துப்பாக்கிகளை முகத்தின் மேல் வைத்து மிரட்டுகையில், அக்குழந்தை மண்டியிட்டு அழுவதை சித்திருக்கும் வகையில் இந்த காட்சி உள்ளது.
பொது மக்களுக்கு, புரட்சியாளர்கள் மீதும், திவிரவாதிகளின் மீதும் கோபமும், வெறுப்பும் அடைய வைக்கும் வகையிலும், யூன் மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் மக்களை கவருவதற்காகவும் அசாத் ஆதரவாளர்களால் இந்த புகைப்படம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என சந்தேகம் எழுந்துள்ளது.
அயினும், சிரியா பாராளுமன்றத்தில் எதிர்கட்சியாளர்கள், அசாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என்வும், தேர்தல் சதந்திரமாகவும், நியாமானதாகவும் இருக்க வேண்டும் எனவும் வலுயுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment